செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

புதுக்குடியிருப்பில் போதைக்கு அடிமையான கிராமசேவகர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போதைக்கு அடிமையான கிராம சேவகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

news-details

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் பொலிஸாருக்கு இரகசிய தகவல் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக குறித்த கிராம அலுவலர் ஹெரோயின் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில் நேற்று குறித்த போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். குறித்த நபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments